ராகுல் காந்தி தெலங்கானா மாநிலத்தில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
தீபாவளி விடுமுறைக்கு பின்னர் , நேற்று (அக்டோபர் 27 ) மக்தல் சட்டமன்றத் தொகுதியின் குடேபெல்லூரில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார்.
குடேபெல்லூரில் இருந்து நாராயண்பேட்டை மாவட்டம் யெலிகண்ட்லா வரை 26.7 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடந்தார்.
அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவரான முகமது அசாருதீன் ராகுல் காந்தியைச் சந்தித்து அவருடன் கைகோர்த்து நடை பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி பேசுகையில் “மாநிலத்திலும் மத்தியிலும் டி.ஆர்.எஸ். (ராஷ்டிர சமிதி கட்சி) மற்றும் பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறது.
இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதாக நாடகம் ஆடுகின்றன. டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க. அரசுகளின் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
எங்களுக்கு பாஜகவும் (மோடியும் ) டிஆர்எஸ்ஸும் ( ராவும் ) ஒன்றுதான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கிறார்கள்.
தெலங்கானாவில் டிஆர்எஸுக்கு பாஜக ஆதரவளிக்கிறது, டெல்லியில் பாஜகவை டிஆர்எஸ் ஆதரிக்கிறது.
இரண்டும் ஜனநாயக விரோத கட்சிகள். அவை பண அரசியலை செய்கின்றன, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசாங்கத்தை கவிழ்க்கின்றன,” என்று கூறினார்.
மேலும், “பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்பும் அனைத்து மசோதாக்களுக்கும் டிஆர்எஸ் தனது முழு ஆதரவை வழங்கியிருக்கிறது. விவசாயம் தொடர்பான மூன்று கறுப்புச் சட்டங்கள் டிஆர்எஸின் முழு ஆதரவைக் கொண்டுள்ளன.
நாங்கள் மூன்று கறுப்பு சட்டங்களை எதிர்த்து தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் டிஆர்எஸ் அதை ஆதரிக்கவில்லை” என்று பேசினார் ராகுல் காந்தி.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் – கெஜ்ரிவால் கோரிக்கையின் பின்னணி!
“சத்யாவை கொல்ல 10 நாள் திட்டம்” – கொலையாளி சதீஷ் திகில் வாக்குமூலம்!