முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் இன்று (ஆகஸ்ட் 23) காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 22) இரவு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
ராஜா சிங் தங்களது மத உணர்வுகளை அவமானப்படுத்தி விட்டதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ ராஜா சிங் கூறும்போது, “ஹைதராபாத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிவி காமெடி நிகழ்ச்சியில் முன்வர் ஃபாருக் என்ற காமெடியன் இந்து கடவுள்கள் குறித்து பேசியிருந்தார்.
அவருக்கு எதிராக நான் காமெடியாகத் தான், வீடியோ வெளியிட்டேன். போலீசார் எதனடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் எந்த மதத்தையும் இழிவாகப் பேசவில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜா சிங் வெளியிட்ட 10 நிமிட வீடியோவில், முகமது நபிகள் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மேலும், காமெடியன் முன்வர் ஃபாருக்குக்கு எதிராகவும், அவரது குடும்பத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார்.
முன்னதாக, பாஜக நிர்வாகி நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து பேசியது சர்சசையான நிலையில், ராஜா சிங் பேச்சு தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
நபிகள் பற்றி சர்ச்சை: நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை!