அடேங்கப்பா… பிட்காயின் மதிப்பு இவ்வளவு உயர்ந்திடுச்சா?

Published On:

| By Selvam

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிட்காயின் மதிப்பு முதல்முறையாக ஒரு லட்சம் டாலராக உயர்ந்துள்ளது.

கிரிப்டோகரன்சியில் சுமார் 24,000 டோக்கன்கள் (வகைகள்) உள்ளது. இதில் 300 வகையான கிரிப்டோகரன்சிகள் மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தவகையான கிரிப்டோகரன்சியின் தாய் கரன்சி தான் பிட்காயின்.

கிரிப்டோகரன்சி டிரேடிங்கிற்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 30 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது, கிரிப்டோகரன்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம், வரி குறைக்கப்படும், பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை விரிவுப்படுத்துவோம் என்று டிரம்ப் வாக்குறுதி கொடுத்திருந்தார். இதனால் அவருக்கு வரவேற்பு கிடைத்திருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற அன்று ஒரேநாளில் 75,000 டாலராக பிட்காயின் மதிப்பு உச்சத்தை அடைந்தது.

இந்த ஆண்டு முடிவதற்குள் 75,000 டாலராக உயர்ந்துள்ள பிட்காயின் 1 லட்சம் முதல் 1,20,000 டாலராக உயரும் என்று கிரிப்டோகரன்சியில் அனுபவமுள்ள மணிகண்டன் மின்னம்பலத்திடம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நவம்பர் 6-ஆம் தேதி டிரம்ப் வெற்றி உச்சத்தை தொட்ட பிட்காயின் விலை என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு முதல்முறையாக 1 லட்சம் டாலராக உச்சமடைந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும்.

பிட்காயின் மதிப்பு ஒரு லட்சம் டாலராக உயர்ந்துள்ள நிலையில், வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் பயணம் எப்போது?: சசிகலா

சரி கமப நிகழ்ச்சி வழியாக தர்ஷினி கிராமத்துக்கு கிடைத்த பஸ் போக்குவரத்து… எப்படி?