பிட்காயின் உட்பட 5 விதமான காயின்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (மார்ச் 7) ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். bitcoin going to reach 1.5 lakh dollar due to Trump sign
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றது முதல் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, 67,000 டாலராக இருந்த ஒரு பிட்காயின் கடந்த 10 மணி நேரத்தில் 75,400 டாலராக உச்சத்தை அடைந்தது.
தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பிட்காயின் மதிப்பு முதல்முறையாக ஒரு லட்சம் 9 ஆயிரம் டாலராக உயர்ந்தது.
இந்த நிலையில் ADA, XRP, SOL, ETH, BITCOIN ஆகிய 5 விதமான காயின்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (மார்ச் 7) ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் அடுத்த ஆறு மாதத்திற்குள் பிட் காயின் மதிப்பு 1.30 லட்சம் டாலரில் இருந்து, 1.50 லட்சம் டாலர் வரையில் உயர வாய்ப்புள்ளது என்கிறார்கள் கிரிப்டோ டிரேடிங் வல்லுநர்கள்.
ஏற்கெனவே மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் நாட்டில் முதல்முதலாக பிட்காயினுக்கு முழுவதுமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அந்த நாட்டில் 550 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயினை அரசே கையிருப்பு வைத்துள்ளது.
இந்த நிலையில் தான் 5 விதமான காயின்களை கருவூலத்தில் சேர்த்து அரசுடைமையாக்கி சேகரிக்கலாம் என்று டிரம்ப் இன்றுஉத்தரவிட்டார். அதன்படி சில்க் ரோடு(டார்க் வெப்) மூலமாக தவறான பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்த இண்டர்போல் போலீசார் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் காயின்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் சேர்த்துள்ளனர்.
அமெரிக்காவில் ETF எனப்படும் எலக்ட்ரானிக் டிரேடிங் பண்ட் கம்பெனிகள் மொத்தம் 12 உள்ளது. அதில் 14 டிரில்லியன் டாலர் கையாளக்கூடிய நிறுவனமாக ‘பிளாக் ராக்’ உள்ளது. இந்த கம்பெனி தான் உலகெங்கிலும் உள்ள ஸ்டாக் மார்க்கெட், கமாடிட்டி டிரேடிங் (தங்கம், வெள்ளி, மஞ்சள், கோதுமை, கச்சா எண்ணெய் உட்பட) உள்ளிட்டவைகளை நிர்ணயம் செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது 5 லட்சத்து 72 ஆயிரம் பிட்காயின் கையிருப்பு வைத்துள்ளனர். இதன் அமெரிக்க மதிப்பு 51 பில்லியன் டாலர் ஆகும்.
இந்த நிலையில் டிரம்பின் கையெழுத்து, பிளாக் ராக் போன்ற ஈடிஎஃப் நிறுவனங்களை பெருமளவில் ஊக்குவித்துள்ளது. இதனால் தற்போது பொது மக்களும் ஈடிஎஃப் மூலம் முதலீடு செய்ய முன் வருகிறார்கள். இதன்மூலம் பிட்காயின் உட்பட காயின்களின் மதிப்பு புதிய உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது.