உலகப்பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது 67 -வது வயதில் காதலில் விழுந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த பில்கேட்ஸ் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக மனைவி மெலிண்டாவை விவகாரத்து செய்தார். இதன் மூலம் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு உயிரிழந்த ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்ட்-இன் மனைவி பவுலா ஹர்ட் உடன்தான் பில்கேட்ஸ் தற்போது காதலில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இருவரும் இணைந்து டென்னிஸ் பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
டென்னிஸ் மீதான ஆர்வம் தான் பில்கேட்ஸ் மற்றும் பவுலா ஹார்ட்-ன் காதலுக்கான காரணம் என்று பேஜ் சிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பவுலா மற்றும் மறைந்த மார்க் தம்பதியருக்கு கேத்ரின் மற்றும் கெல்லி என்ற இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“பணம் உலகை காலி பண்ணிடும்” : பிச்சைக்காரன் 2 அப்டேட் வெளியீடு!
பரந்தூர் விமான நிலையம்: டெண்டர் அவகாசம் நீட்டிப்பு!