பீகாரில் பாம்புக் கடிக்கு ஆளான ரயில்வே ஊழியர் ஒருவர் அந்தப் பாம்பைத் திருப்பிக் கடித்ததில் பாம்பு உயிரிழந்து அவர் உயிர் பிழைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ் லோஹர் என்ற ரயில்வே ஊழியர் பீகாரிலுள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் குழுவில் பணியாற்றி வருகிறார். வேலை முடிந்து இரவு முகாமில் தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷை பாம்பு கடித்திருக்கிறது.
பின்னர், தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்தால் விஷம் பாம்புக்கு மாறி உயிர் பிழைத்துவிடலாம் என்ற உள்ளூர் கட்டுக்கதையை நம்பிய சந்தோஷ், பதிலுக்கு அந்த பாம்பைக் கடித்தார். சந்தோஷ் திருப்பிக் கடித்த பாம்பு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
விஷயமறிந்த சந்தோஷின் சக ஊழியர்கள் உடனடியாக அவரை ராஜவுலி துணைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒருவழியாக மருத்துவ சிகிச்சை மூலம் உயிர் பிழைத்த சந்தோஷ் இரவு முழுவதும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்து அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதே சமயம், அவரைக் கடித்தது என்ன வகையான பாம்பு என்று தெரியவில்லை என சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்னொரு பக்கம், சந்தோஷ் திருப்பிக் கடித்த பாம்பு பரிதாபமாக உயிரிழந்து அவர் உயிர் பிழைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் மூன்று முறை மற்றும் இந்த மாதம் இரண்டு முறை என ஐந்து முறை பாம்பு கடிக்குள்ளான ஒருவர் ஐந்து முறையும் உயிர் பிழைத்தது மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி!
பியூட்டி டிப்ஸ்: ஷாம்பு குளியலுக்கு முன் தலையில் எண்ணெய் தடவுபவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு இறுதி அஞ்சலி முதல் தோனி பிறந்தநாள் வரை!
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லதா?