உக்ரைனில் அமெரிக்க அதிபர் பைடன்: ரஷ்யா அதிர்ச்சி!

இந்தியா

உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா போரை தொடங்கியது. ஓராண்டை நெருங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.

எனினும், போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் வந்திறங்கி ரஷ்யாவுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் பைடன் போலந்து செல்ல திட்டமிட்டருந்தார். எதிர்பாராதவிதமாக முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் கீவில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், “ஒரு வருடத்துக்கு முன்பு ரஷ்யா போர் தொடுத்தபோது, உக்ரைன் வலுவானது அல்ல, மேற்குலக நாடுகள் ஒன்றாக இல்லை, நேட்டோவை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாது என்று புதின் நினைத்துக்கொண்டிருந்தார்.

மேலும், உக்ரைன் பக்கம் மற்றவர்களைக் கொண்டு வர முடியாது என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவர் அவ்வாறு நினைத்தது தவறு. அதற்கான ஆதாரம், இப்போது நாங்கள் இங்கு ஒன்றாக நிற்கிறோம்” என்றார்.

ஏற்கெனவே, உக்ரைனுக்கு பைடன் ஒருமுறையாவது நேரில் வந்து நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

கடந்த வாரம்கூட, “பைடன் உக்ரைனுக்கு வந்தால், அது எங்களுக்கான அமெரிக்க ஆதரவை உலகத்துக்கு தெரிவிக்கும் அறிகுறியாக இருக்கும்” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றது ரஷ்யாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

ராஜ்

அடி மேல் அடி! துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *