உருமாறிய கொரோனா: மீண்டும் கட்டுப்பாடுகள்? – பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா

இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 22) உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார்.

2019ல் தொடங்கி இந்நாள் வரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். தற்போது ஒமிக்ரானின் சப்வேரியண்ட் எனப்படும் உருமாறிய பிஎப்-7 பரவலால் சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மட்டுமின்றி உலக நாடுகளின் பலவற்றுக்கும் பிஎப்-7 பரவியிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியத்திலும் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

சீனா, பெய்ஜிங்கில் உள்ள க்சியோடாங்ஷான் மருத்துவமனையின் மருத்துவர், லீ டாங்செங் பிஎப்-7 குறித்து கூறுகையில், “பிஎப்-7 அறிகுறிகள் ஒமிக்ரானின் மற்ற துணை வகைகளைப் போலவே இருக்கும்.

நோயாளிகளுக்குக் காய்ச்சல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்குப் பரவும். முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கூட இந்த தொற்று ஆபத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

இந்த வைரசால் சீனாவில் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. குஜராத்தில் 3 பேரும் ஒடிசாவில் ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்தந்த மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.

இதில், மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

நேற்று, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சீனா மற்றும் பிறநாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய ஆலோசனையில் விமான பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிரியா

கட்சி சின்னம், பெயர் விவகாரம்: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!

’மல்லாக்க படுக்க மாட்டேன்’ நயன்தாரா சொன்ன அதிர்ச்சி காரணம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *