இரண்டு வயது குழந்தையை கொன்ற தந்தை சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்தியா

இரண்டு வயது மகளுக்கு உணவளிக்க பணம் இல்லாததால், பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் கெந்தட்டி கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி இரவு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏரிக்கரையில் நீல நிற கார் ஒன்று நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கோலார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பெங்களூருவைச் சேர்ந்த பர்மர் – பவ்யா தம்பதியின் இரண்டு வயது மகள் ஜியா என்பது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டது.

குழந்தைக்கு உணவளிக்க பணம் இல்லாததால் பர்மர் தனது குழந்தையை கொலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குழந்தை ஜியாவை கொலை செய்த பர்மரை போலீசார் கைது செய்தனர்.

பர்மர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிட்காயின் வணிகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், நான் எனது இரண்டு வயது மகளுடன் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டேன். இதற்காக பெங்களூரு – கோலார் நெடுஞ்சாலையில் உள்ள கென்டட்டி ஏரிக்கு எனது குழந்தையை காரில் அழைத்துச் சென்றேன். தற்கொலை எண்ணத்துடன் காரில் பயணம் செய்தபோது நான் குழப்பமடைந்தேன்.

அப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடன் கொடுத்தவர்களால் துன்புறுத்தப்படும் எண்ணங்கள் மற்றும் போலீஸ் வழக்குகள் என்னை திரும்பிச் செல்வதை தடுத்தன. எனது குழந்தைக்கு உணவளிக்க என்னிடம் பணமில்லை. அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நான் விரும்பவில்லை.

காரில் மகளை கட்டிப்பிடித்து அவளுடன் சிறிது நேரம் விளையாடினேன். பின்னர் காரில் இருந்து குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு கென்ட்டி ஏரிக்கு சென்றேன்

அவள் அப்போது அழுது கொண்டிருந்தாள். அவளை கட்டிப்பிடித்து ஏரியில் குதித்தேன். ஏரி ஆழமற்றதாகவும் தண்ணீர் குறைவாகவும் இருந்ததால் நான் ஏரியில் மூழ்கவில்லை. குழந்தையின் உடலை ஏரியில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொன்ற பர்மர் குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி பவ்யாவுடன் பெங்களூருவில் குடியேறினார். பிட்காயின் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டதால், கடந்த 6 மாதங்களாக பர்மர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

உணவளிக்க பணம் இல்லாததால் குழந்தையை தந்தையே கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடி மைதானம்!

சென்னை: தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து பயன்படுத்த வேண்டாம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *