பெங்களூரு:120 அடி தேர் கவிழ்ந்து விபத்து

Published On:

| By indhu

Bengaluru: 150 feet chariot overturned accident

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கோவில் திருவிழாவில் 120 அடி உள்ள மிகப்பெரிய தேர் கவிழ்ந்து இன்று (ஏப்ரல் 6) விபத்து ஏற்பட்டது.

பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோவிலில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மதுரம்மா கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த திருவிழாவில் தேரோட்டம் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும்.

அந்த தேர் பல அடுக்குகளை கொண்ட, உயரமான கட்டிட அமைப்புகளை கொண்டதாக காட்சியளிக்கும். 120 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த தேர் 20 தளங்களை கொண்டது. இந்த தேர் திருவிழாவில் வேறு பல தேர்களும் இழுக்கப்படும்.

அந்த வகையில், 120 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை இன்று (ஏப்ரல் 6) பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென தேர் சாய்ந்து விழுந்தது.

தேர் சாய்வதை கண்டு சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயர் சேதம் தவிர்க்கப்பட்டது. தேர் எந்த காரணத்தால் சாய்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் நேரத்தில் ரம்ஜானுக்கு மட்டும் அனுமதியா? அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீதிபதியின் கேள்வி

IPL 2024: ‘நல்லாருக்கியா பங்காளி’… சென்னையை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share