“தயாராக இருங்கள்” : மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்… எச்சரித்த உச்சநீதிமன்றம்!

Published On:

| By indhu

“Be ready for action” – Supreme Court condemns Baba Ramdev

பதஞ்சலி ஆயுர்வேதாவில் தவறான விளம்பரங்கள் வெளியிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 2) நேரில் ஆஜரானார்.

பதஞ்சலி ஆயுர்வேதாவில் தவறான விளம்பரங்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு பாபா ராம்தேவ் மீதான வழக்கை விசாரித்தனர். இதற்கு, பாபா ராம்தேவ் பதில் மனுத் தாக்கல் செய்யாததால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மார்ச் 19ஆம் தேதி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

அப்போது நடைபெற்ற விசாரணையின்போது, பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் சார்பாக ஒரு பிரமாணப் பத்திரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது.

அதில், பதஞ்சலியின் நோக்கம் இந்த நாட்டின் குடிமக்களை, எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அறிவுறுத்துவது மட்டுமே.

ஆயுர்வேதம் மூலம் வாழ்க்கை முறை தொடர்பான மருத்துவ சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் சுமையை குறைப்பதே பதஞ்சலியின் நோக்கம்.

நவம்பர் 2023 இல், உச்ச நீதிமன்றம் பதஞ்சலி ஆயுர்வேதத்தை நவீன மருத்துவ முறைக்கு எதிரான தவறான கூற்றுக்கள் மற்றும் விளம்பரங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

பதஞ்சலி நிறுவனம் எந்தவிதமான அறிக்கைகளையும், ஆதாரமற்ற கோரிக்கைகளையும் வெளியிட மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

அதன்பிறகு, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக ராம்தேவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

“நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்” என்று பாபா ராம்தேவின் வழக்கறிஞர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர்.

ஆனால், அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “உங்களின் மன்னிப்பு எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை.

தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கைக்கு தயாராக இருங்கள்”என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, “பதஞ்சலியின் தவறான விளம்பரம் மீது மத்திய ஆயுஷ் துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு வாரத்தில் ஆயுஷ் துறை சார்பில் விளக்கம் அளிப்பட வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் மீண்டும் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?

அரசு வாகனங்களில் பணம்… தொழிலதிபர்களிடம் மிரட்டல் : செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share