மகா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சியில் இறைச்சி கடைகள் இயங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பிப்ரவரி 18-ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், பெங்களூரு மாநகராட்சி விலங்குகள் நலன் இயக்குனர் இறைச்சி விற்பனைக்கும் விலங்குகளை கொல்வதற்கும் தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி, ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது இறைச்சி விற்பனைக்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து வருகிறது.
அந்தவகையில், இந்த வருடம் மகா சிவராத்திரிவை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சியில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்
ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!