பிரதமர் மோடி குறித்த பிபிசி வீடியோ: மத்திய அரசு கண்டனம்

இந்தியா

குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் நடைபெற்ற விசாரணை, அப்போது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் நிலை குறித்து இந்தியா மோடி மீதான கேள்வி என்ற ஆவணப்படத்தை ஜனவரி 17 ஆம் தேதி பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது.

அதனைதொடர்ந்து மறுநாள் யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பபடவில்லை. இதனால் ஆவணப்படம் குறித்து கேட்டதையும், எனது நண்பர்கள் பார்த்ததையும் வைத்து தான் நான் எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எதிராக தரம் தாழ்ந்த கருத்துக்களை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

முழுக்க ஒற்றைச்சார்பு மனநிலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஹாலிவுட்டில் படம் இயக்கும் ராஜமௌலி?

ரஜினியின் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்தார் தமன்னா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “பிரதமர் மோடி குறித்த பிபிசி வீடியோ: மத்திய அரசு கண்டனம்

  1. உண்மை மூடி மறைக்க முடியாது., வரலாறு மன்னிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *