பிபிசி பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை!

இந்தியா

பிபிசி நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறை இன்று (பிப்ரவரி 17) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த நேரத்தில் 2002 ஆம் ஆண்டு மிகப்பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் மோடிக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் நடைபெற்றன.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை பிபிசி நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடைசெய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகளையும் திரையிட்டனர்.

இதனிடையே, பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை இன்று (பிப்ரவரி 17 ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிபிசி பெயரை குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இந்தியாவில் இந்த நிறுவனம் பல மொழிகளில் செய்திகளை ஒளிபரப்புகிறது.

இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ள தொகைகளுக்கு கணக்கு காட்டவில்லை. பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

டிவி, ரேடியோ, டிஜிட்டல் என பல்வேறு மொழிகளில் அளிக்கப்படும் சேவையில் வருவாய் கணக்கிடுவதில் விதிமீறல் உள்ளது. ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி ஒளிபரப்புகளில் வருவாய் ஒத்து போகவில்லை.

வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் விரிவாக விசாரணைக்குட்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அதானி நிறுவன பங்கு மோசடி: விசாரணைக்கு குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!

பிரபல ரவுடி தனசேகரன் தற்கொலை முயற்சி… நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *