1.60 லட்சம் கோடியுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரிய அதிபர்… மாஸ்கோவில் உல்லாச வாழ்க்கை!

சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முடிவுக்கு வந்தது. எதிர் தரப்பு தலைநகர் டமாஸ்கஸ்சை கைப்பற்றியதும் சிரியா அதிபர் ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதிபர் ஆசாத் ரஷ்யாவில் ஏராளமான முதலீடுகளை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிரியாவில் இருந்து தப்பித்த போது 1.60 லட்சம் கோடியுடன் அவர் தப்பித்துள்ளார். சிரியாவில் கடந்த 50 ஆண்டு காலமாக எவ்வளவு சுகபோகமாக ஆசாத் குடும்பம் வாழ்ந்ததோ… அதே போலவே, ரஷ்யாவிலும் வாழ்கிறது.

மாஸ்கோவில் பிரமாண்டமான அரண்மனை போன்ற பங்களாவில்தான் தற்போது ஆசாத்தின் குடும்பம் வசிக்கிறது. மாஸ்கோவில் மட்டும் 22 குடியிருப்புகளை ஆசாத் குடும்பம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான நிறுவனங்களில் இந்த குடும்பம் முதலீடும் செய்துள்ளது. இந்த குடும்பத்தினர் உலகம் முழுக்க பல வங்கிகளில் நிதியை குவித்து வைத்துள்ளனர்.

இவரின் மனைவி ஆஸ்மா பிரிட்டனின் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். ஆசாத்தின் மனைவிதான் அவரின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் என்று கூறப்படுகிறது. சிரியாவிலுள்ள ஆசாத்தின் அரண்மணையை அலங்கரிக்கவே பல கோடி ரூபாயை இவர் செலவழித்துள்ளார். சிரிய மக்கள் வறுமையின் பிடியில் தவிக்க, வித விதமான ஆடைகளை வாங்கி குவிப்பவர் ஆசாத்தின் மனைவி. ஆசாத்தின் மனைவியை சிரிய மக்கள் வில்லியாகவே பார்த்தனர். இதனால்தான் ஆசாத் நாட்டை விட்டு ஓடியதும் சிரிய மக்களிடத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

ரஷ்ய அதிபர் புதினே, ஆசாத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாஸ்கோவில் சிரிய அதிபர் குடும்பத்தினர் எந்த பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மிகுந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

ரஜினிகாந்த் பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து!

2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts