வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் தான் வங்கிகள் இயங்குமா?

இந்தியா

வங்கிகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வங்கிகள் மாதத்தின் முதலாவது, மூன்றாவது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக உள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறையாக உள்ளது. எனினும், பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர் சங்கத்தினர், அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதியமைச்சகத்துக்குத் தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், இனி வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே, அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும்.

அனைத்துச் சனிக்கிழமைகளும் வங்கிகள் செயல்படாது என்பதால் தினசரி வேலை நாட்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வங்கி செயல்பாடு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் இந்தக் கோரிக்கை நிதியமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: முட்டை அடை

+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *