கவனம்… நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!

இந்தியா

நாளை (ஜனவரி 28) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் வங்கி தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது,

காலி பணியிடங்களை நிரப்புவது, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது,

ஆகிய ஆறு அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 30, 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

இதனால் 30ஆம் தேதி (திங்கட்கிழமை), 31ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது.

மேலும் நாளை (ஜனவரி 28) நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் (ஜனவரி 29) வங்கிகளுக்கு விடுமுறை.

ஆக நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்கிற நிலையில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மும்பையில் துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து சமரச கூட்டம் வருகிற இன்று (ஜனவரி 27) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராஜ்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு ஆளுநர் கொடுத்த டீ… ஆவி பறக்கும் திமுக கூட்டணி! 

நவீன டாங்கிகள்: ஜெர்மனி, அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.