வங்கி ஊழியர்கள் 2 நாள் போராட்டம் ஒத்திவைப்பு!

இந்தியா

ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் இரண்டு நாட்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக நிர்வாகங்கள் உறுதி அளித்தன.

இதனையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், வரும் 30,31 தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சரியும் பங்கு மதிப்பு : மிரட்டும் அதானி… சவால் விடுத்துள்ள ஹிண்டன்பர்க்

பிறந்தநாளன்று டிக்டாக் பிரபலம் தற்கொலை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *