கொரோனா வைரஸ் தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூர்- காரைக்கால் பயணிகள் ரயில், நேற்று திங்கட்கிழமை ( ஜூலை 25) முதல் பயணிகள் விரைவு ரயிலாக மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.
புதிய இரயிலுக்கு, மாரண்டஹள்ளி இரயில்வே கேங் சார்பிலும் இரயில் நிலைய ஊழியர்கள் சார்பிலும் பூமாலையிட்டு பூஜை செய்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் மாரண்டஹள்ளி, சிக்கமாரண்டஹள்ளி, மற்றும் புதூர் பொதுமக்கள் கலந்து கொண்டு வரவேற்றனர்.
வண்டி எண் 16529 பையப்பனஹள்ளி(SMVB) காலை 7.44 க்கு புறப்பட்டு ஓசூர் இராயக்கோட்டை மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சேலம், ஆத்தூர், கடலூர், சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை வழியாக காரைக்காலுக்கு இரவு 10:35 மணிக்கு சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் காரைக்காலில் இருந்து (வண்டி எண் 16530 ) காலை 05:30 மணிக்கு புறப்பட்டு மாரண்டஹள்ளிக்கு மாலை 05:14க்கும் பையப்பணஹள்ளி இரவு 09:30க்கு சென்றடையும். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
–நாதன்