பெங்களூரு கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அத்புல் மாதீன் தாஹா ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 12) கைது செய்தனர்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த மார்ச் 27-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்ட ஷபீரை கைது செய்தனர்.
இருப்பினும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்டவர்களை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடி வந்தனர். குற்றவாளிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்தநிலையில், மேற்குவங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த ஹூசைன் ஷாகிப் மற்றும் அத்புல் மாதீன் தாஹா ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, “ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த ஹூசைன் ஷாகிப் மற்றும் அத்புல் மாதீன் தாஹா ஆகிய இருவரையும் இன்று அதிகாலை கொல்கத்தாவில் வைத்து கைது செய்தோம். இவர்கள் இருவரும் போலியான அடையாளங்களுடன் இங்கு வசித்து வந்துள்ளனர். கஃபேவில் எல்இடி குண்டை வெடிக்க வைத்தவர் ஷாகிப். இந்த சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டது தாஹா.
மேலும், இந்த வழக்கில் மாஸ் முனீர் அகமது, முஸம்மில் ஷபீர் ஆகிய இரண்டு நபர்களை என்ஐஏ சந்தேகிக்கிறது. இதில் மாஸ் முனீர் அகமது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது சிறையில் இருந்துள்ளார். மற்றொரு நபரான ஷபீரை கடந்த மார்ச் 27-ஆம் தேதி கைது செய்துள்ளோம்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற கிரிப்டோகரன்சி முறையில் தாஹா மற்றவர்களுக்கு நிதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ரோமியோ’ விஜய் ஆண்டனி கவர்கிறாரா? – திரை விமர்சனம்!
பாஜக – திமுக மோதல்… “அண்ணாமலையின் மிரட்டல் கோவையில் எடுபடாது”: கணபதி ராஜ்குமார்