சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு தொல்லியல் துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 245 ஏக்கர் ஆகும். செங்கோட்டை இந்தியாவில் முக்கிய வரலாற்றுச் சின்னமாக இருக்கிறது. திங்கட்கிழமையை தவிர வாரத்தில் அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதி அளிக்கப்படும். நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டு முதல் தற்போது வரை சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமரால் கொடியேற்றம் நடைபெறும்.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சுதந்திர தின கொண்டாடத்தை முன்னிட்டு செங்கோட்டையை மக்கள் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின கொடியேற்றம் முடிந்த பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா