நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை தீவிரப்படுத்துதல் போன்றவற்றில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே இன்று(செப்டம்பர் 22) கேரளா, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 மாநிலங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் அதிரடி சோதனை மேற்கோண்டனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதில் கேரளாவில் 22 பேரும், கர்நாடகாவில் 20 பேரும், ஆந்திரா பிரதேசத்தில் 5 பேரும், அசாமில் 9 பேரும், டில்லியில் 3பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும்,
புதுச்சேரியில் 3பேரும், தமிழகத்தில் 10 பேரும், உத்திரபிரதேசத்தில் 8 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும் என மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் பரப்பரப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில் டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சோதனை குறித்து அமித்ஷா விளக்கமாகக் கேட்டுள்ளார்.
இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்வது குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கலை.ரா
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணை!
இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா