சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுலுக்கு பின் வரிசை இருக்கை : புது சர்ச்சை!

Published On:

| By Kavi

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி.

2014 முதல் 2024 வரை தேவையான எம்.பி.க்கள் இல்லை என்பதால் எதிர்க்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர்ந்துள்ளது.

இந்தசூழலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரை கடைசி இருக்கையில் இருந்து இரண்டாவது இருக்கையில் அமரவைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


சுதந்திர தின நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் மற்றும் ஒலிம்பிக் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியின் தலைவர் ஹர்மன்பிரீத் சிங், பிஆர் ஸ்ரீஜேஷ் உள்ளிட்டோர் அவருக்கு முன் வரிசையில் அமர்ந்தனர்.

முன் வரிசையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் பதவிக்கு நிகரான பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை ஏன் பின் இருக்கையில் அமரவைக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர தின நிகழ்வை ஏற்பாடு செய்வது மற்றும் இருக்கை ஏற்பாடுகளை தீர்மானிப்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாகும்.

இந்தசூழலில் ராகுல் காந்திக்கு பின் வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் தரப்பில், “ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு முன் வரிசை இருக்கை கொடுக்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டது” என்று கூறப்படுகிறது.


“காங்கிரஸ் ஆட்சியின் போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படும், பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையேயான வேறுபாடு” என்று காங்கிரஸைச் சேர்ந்த ரோஷன் ராய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலக அழுத்தமா?: குஷ்பு விளக்கம்!

ஆகஸ்ட் 19… நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தயாராகும் அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel