உலகிலேயே முதல் முறையாக ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்து 8 சிசுக்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அக்டோபர் 10ஆம் தேதி குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தையின் வயிறு வீங்கி இருந்ததால் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு அனுப்பி வைத்தனர்.
ராஞ்சியில் உள்ள ராணி குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு கட்டி இல்லை என்றும், ஆனால் ‘ஃபெடஸ் இன் ஃபூடூ’ என்ற நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதாவது உயிருள்ள இரட்டையரின் உடலுக்குள் கருவைப் போன்ற திசுக்கள் உருவாகும் நிலையாகும்.
அதன்படி அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த வளர்ச்சியடையாத 8 கருக்களை மருத்துவர்கள் அகற்றினர். சிகிச்சைக்குப் பின் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற வழக்குகள் உலகில் அரிதாகவே காணப்படுகின்றன. 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகின்றன.
இந்தியாவில் இதுபோன்ற பத்து வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்று ராஞ்சி மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
கலை.ரா
கே.ஜி.எப். பாடல் : ராகுலுக்கு வந்த சிக்கல்!
அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!