Baba Ramdev apologized to the Supreme Court!

உச்சநீதிமன்றத்தில் கைகூப்பி மன்னிப்பு கோரினார் பாபா ராம்தேவ்

இந்தியா

உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக பாபா ராம்தேவ் இன்று (ஏப்ரல் 16) நேரில் ஆஜாராகி மன்னிப்பு கோரினார்.

பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் தலைவரான பாபா ராம்தேவ், அந்நிறுவனத்தை பிரபலப்படுத்த தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத பல்வேறு நோய்களையும், பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு ஏப்ரல் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். எனினும் பாபா ராம்தேவ் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பு வெறும் வாய்வார்த்தை என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையையும் தள்ளிவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார்.

இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?

நடிகை லட்சுமி மேனனா இது? – ஆளே அடையாளம் தெரியல… வைரல் ஆகும் Video..!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *