அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஜனவரி 22) கோலாகமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 10.25 மணிக்கு பிரதமர் மோடி அயோத்தி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணிக்கு அயோத்தி ஹெலிபேட் தளத்திற்கு செல்கிறார்.
10.55 மணிக்கு ராமர் கோவிலை பிரதமர் மோடி வந்தடைகிறார். பகல் 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். 12.05 முதல் 12.55 மணி வரை பிரதமர் மோடி முன்னிலையில் குழந்தை ராமருக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு பக்தர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் மதியம் 2.10 மணிக்கு குபேர் திலா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்கிறார். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, அயோத்தி நகரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அயோத்தி சர்ச்சை: அறநிலையத் துறைக்குள் என்ன நடக்கிறது?
அயோத்திக்கு ஹனுமான் என்னை அழைத்தார்: சிரஞ்சீவி