இந்தியாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் உயர்மட்ட மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது.
இந்தியாவில் 4 பேருக்கு பிஎப்7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றி பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தச்சூழலில் இந்திய மருத்துவ சங்கம் இன்று (டிசம்பர் 22) பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “உலக நாடுகளில் திடீரென கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்கள் உடனடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 5.37 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருமண நிகழ்ச்சிகள், அரசியல் அல்லது சமூக கூட்டங்கள் மற்றும் சர்வதேச பயணம், பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சோப்பைப் பயன்படுத்தி கைக்கழுவுதல், சானிட்டைசரை பயன்படுத்துதல் என முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சளி, காய்ச்சல் , தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
பூஸ்டர் தடுப்பூசிகள் போடாமல் இருந்தால் போட்டுக்கொள்ள வேண்டும். அரசு வெளியிடும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.
பிரியா
28 ஆண்டுகளுக்கு பிறகு மனநல மருத்துவமனைக்கு சென்ற முதல்வர்!
கொரோனா தாக்கம்: கலக்கத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்