assembly election 2023 updates

Election2023: ம.பி, சத்தீஸ்கர்: மதியம் வரை வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

இந்தியா

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. assembly election 2023 updates

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த நவம்பர் 7-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

தற்போது மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். தேர்தல் முடிவுகள் வருகின்ற டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும்.

இந்த நிலையில் மதியம்  1 மணி நேர நிலவரப்படி சத்தீஸ்கரில் 38.22% வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 45.40% வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சி

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ”சத்தீஸ்கரில் 75 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். இங்கு எந்த போட்டியும் எங்களுக்கு கிடையாது,” என தெரிவித்துள்ளார்.

மோதல்

மத்திய பிரதேசத்தில் உள்ள மோரீனா மாவட்டத்தில் உள்ள திமானி தொகுதியை சேர்ந்த வாக்குச்சாவடி எண் 147 மற்றும் 148-ல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினர் கற்களை கொண்டு தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு தொடர் பதட்டம் நிலவுகிறது.

பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் என நம்புகிறேன்.

முதல் முறையாக வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். assembly election 2023 updates

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

அண்ணா பல்கலை தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!

WorldCup2023final: எகிறும் ஹோட்டல் வாடகை, விமானக் கட்டணம்… அதிரும் அகமதாபாத்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0