அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை!
அசாம் மாநிலத்தின் திஸ்பூரில் உள்ள மாநில செயலக வளாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அசாம் அரசு ஆடைக் கட்டுப்பாடு உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிய தடை விதித்துள்ளது.
இதன்படி ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரியின் உத்தரவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தினசரி ஊதியம் மற்றும் நிலையான ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் மாநில சட்டசபை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஊழியர்களுக்கு சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டசபை நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் ஊடகவியலாளர்களும் இனி அரசாங்க வழிகாட்டுதல்படிதான் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
கிச்சன் கீர்த்தனா : சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட்