அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து செய்தியை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் ஆற்றில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அசாமில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிக்கச் சென்றார்.
அதன் பின் அவர் ஆற்றங்கரையில் நின்று மக்களின் பிரச்சினைகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் அந்த ஊடகவியலாளர் ஆற்றில் நீந்தி மக்களின் உதவியோடு உயிர் தப்பினார்.
రిపోర్టింగ్ చేస్తూ నదిలో పడిపోయిన రిపోర్టర్
అస్సాంలో వరద బీభత్సం కొనసాగుతున్న ప్రాంతాల్లో ప్రజల సమస్యలను రిపోర్ట్ చేసేందుకు వెళ్లిన ఓ జర్నలిస్టు తృటిలో ప్రాణాలతో బయటపడ్డాడు
నది పక్కన నిల్చొని ప్రజలతో మాట్లాడుతుండగా ఆయన నీటిలో పడిపోయారు. pic.twitter.com/DZeHHAuKPV
— Telugu Scribe (@TeluguScribe) July 12, 2024
இது தொடர்பாக தெலுங்கு ஸ்க்ரைபின் எக்ஸ் கணக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டது, “அசாமின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடும்போது ஆற்றில் விழுந்து பத்திரிகையாளர் உயிர் பிழைத்தார்” என்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காணாமல் போன குழந்தைகளின் உடல்கள் மீட்பு : பாட்னாவில் கலவரம்!
நிராகரிக்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இந்த மாதம் முதல் ரூ.1,000 !