200 டன் தங்கம் வைத்திருந்தாலும் தங்க விரும்பவில்லை – சிரிய அதிபர் மனைவி விவாகரத்து?

Published On:

| By Kumaresan M

சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. சமீபத்தில் ஹயாத் தாக்கீர் அல் ஹாம் அமைப்பு சிரியாவை கைப்பற்றியது.

இதையடுத்து, பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்துடன் சிரிய அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பி விட்டார். அங்கு, மாஸ்கோவில் ரகசிய இடத்தில் சிரிய அதிபர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

அவரிடத்தில் 200 டன் தங்கமும் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தும் இருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் 1.35 லட்சம் கோடி சொத்து உள்ளது.

உலகிலுள்ள அனைத்து சொகுசு கார்களும் அவரிடத்தில் உள்ளன. கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸ்ஸை பிடித்ததும் சிரிய அதிபர் தன்னுடன் இருந்த அனைத்து தங்கம் மற்றும் பணத்துடன் ரஷ்யாவுக்கு தப்பி விட்டார்.

சிரியாவில் 90 சதவிகித மக்கள் பசியும் பட்டினியுமாக வாழ, சிரிய அதிபர் பெரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், மாஸ்கோவில் வாழ பிடிக்காமல் ஆசாத்தின் மனைவி ஆஷ்மா, அவரிடத்தில் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மற்றும் சிரிய குடியுரிமை பெற்றுள்ள ஆஷ்மா தனது சொந்த ஊரான லண்டனில் வசிக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் சிரிய பெற்றோருக்கு பிறந்த ஆஷ்மா, 2000 ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்றார். அதே ஆண்டில் சிரிய அதிபரை மணமுடித்தார். 2000 ஆம் ஆண்டில்தான் ஆசாத் சிரிய அதிபராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, 49 வயதான அவர் ரஷ்ய நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தன்னை லண்டனுக்கு செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அவரின் மனு ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சிரிய அதிபருக்கு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில்தான் ரஷ்யா அடைக்கலம் கொடுத்துள்ளது. மாஸ்கோவை விட்டு எந்த காரணம் கொண்டும் வெளியே செல்லக் கூடாது.

அரசியல்ரீதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்கிற நிபந்தனைகள் முக்கியமானது. தற்போது, அவரிடத்திலுள்ள 270 கிலோ தங்கம் மற்றும் மாஸ்கோவிலுள்ள அவருக்கு சொந்தமான 18 அபார்ட்மென்டுகள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்ய அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

எம்.குமரேசன்

அதிகரித்து வரும் வருமான வரி பங்கு…அவதிப்படும் மக்கள்!

2026.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 25 இடங்கள் வேண்டும் : வன்னி அரச

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share