அருணாச்சலபிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இன்று (அக்டோபர் 5) காலை 10 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சீட்டா ரக ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லெப்டினன்ட் கர்னல் சரவப் யாதவ் உயிரிழந்துள்ளார். மற்றொரு விமானி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான ரோந்து பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமான விபத்து குறித்த காரணம் இன்னும் தெரியவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.