இந்தியாவில் மேலும் 4 இடங்களில் ஆப்பிள் நேரடி ஷோரூம்களை திறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலும் திறக்கப்படுகிறதா?
இந்தியாவில் மும்பை, டெல்லி நகரங்களில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி ஷோரூம்கள் உள்ளன.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளதாவது, ‘கடந்த ஜூலை செப்டம்பர் மாதத்தில் மட்டும் 94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளோம்.
கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் கிடைத்த வருவாயை விட இது 6 சதவிகிதம் அதிகம். மெக்சிகோ, பிரேசில், இந்தியா, தெற்காசிய நாடுகளில் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 4 இடங்களில் ஆப்பிள் நிறுவனங்களின் நேரடி ஷோரூம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய ஷோரூம்கள் பெங்களுரு, டெல்லி என்சிஆர், மும்பை, புனே போன்ற நகரங்களில்தான் திறக்கப்படுகின்றன. இந்த முறையும் சென்னை மிஸ் ஆகியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஐபோன் ஏற்றுமதி செய்யப்படுவதும் அதிகரித்து கொண்டே உள்ளது. கடந்த 2022- 23 ஆம் ஆண்டில் 6.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஐபோன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
தற்போது, அதுவே 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 85 ஆயிரம் கோடி ஆகும். மொத்தம் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான Phone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ரக மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் பாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன்களை தயாரிக்கின்றன. இதில், பாக்ஸ்கான் நிறுவனத்திடம் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ரக மாடல்களை உற்பத்தி செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து முற்றிலும் வெளியேறும் முடிவிலுள்ள ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை ஐபோன் உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–எம்.குமரேசன்
மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!
அத்வானியை வீழ்த்தி மோடி பிரதம வேட்பாளராக ஆனது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட வெங்கைய நாயுடு
‘மார்கோ படத்தை எடுத்தவரு அந்த ஊரு அட்லீ போல’: வம்பு இழுத்த மாறன் – டோஸ்விட்ட மலையாளிகள்!
அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது!