மனைவியை 12 துண்டுகளாக வெட்டி வீட்டில் புதைத்து வீடு கட்டிய கணவரை கைது செய்த போலீசார் வீட்டை இடித்து உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டம் போரியோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோண்டா மலையில் வசித்து வந்தவர் ரபிகா பஹாடின் என்ற பழங்குடியின பெண்.
இவர் சில தினங்களாக காணாமல் போனார். கணவரிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். மேலும் அவரது வீட்டில் சந்தேகத்திற்கு இடமாக ஆங்காங்கே எலும்பு துண்டுகளும் இருந்துள்ளது.
இதையடுத்து கணவர் தில்தார் அன்சாரியை பிடித்து விசாரித்தபோது, மனைவியை கொன்று அறுவை இயந்திரம் மூலம் 12 துண்டுகளாக வெட்டி வீசியதாக தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட ரபிகா உடலின் ஒரு சில பகுதிகள் 90% அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தலை மற்றும் உடலின் சில பாகங்கள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் மோப்ப நாய் உதவியுடன் தேடியபோது, பெண்ணின் உடல் கட்டிடத்திற்குள் வைத்து கட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வீட்டை இடித்து தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர். கொலையான ரபிகா, தில்தார் அன்சாரிக்கு இரண்டாவது மனைவி ஆவார்.
டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொல்லப்பட்டு அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. உத்தர பிரதேசத்திலும், இதுபோன்று காதலி ஒருவர் காதலனால் கொல்லப்பட்டு வெட்டி வீசப்பட்டார்.
டெல்லி கிழக்கில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மனைவி பூனம், தனது மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசியது பரபரப்பு ஏற்படுத்தியது.
கலை.ரா
நடுவானில் பெண் பயணிக்கு நெஞ்சுவலி: சென்னையில் தரையிறங்கிய விமானம்!
ஹீரோக்களில் நம்பர் ஒன் யார்? தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி!