உக்ரைனில் மேலும் ஓர் அணை குண்டு வீசி தகர்ப்பு!

இந்தியா

தங்கள் நாட்டிலுள்ள மேலும் ஓா் அணையை ரஷ்யா குண்டுவீசி தகா்த்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. 

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போர் நடவடிக்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது.

கடந்த ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியையொட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், “மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகா்த்துள்ளனா். இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த்தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா். அவா்களது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷ்யா தகா்த்துள்ளது. எனினும், ரஷ்யாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உக்ரைன் ராணுவத்தின் முன்னேற்றம் தொடா்கிறது”  என்று உக்ரைனின் கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறியுள்ளார்.    

ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி தங்களது படையினா் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷியா ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.  தங்களது படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்யா குண்டு வீசி தகா்த்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது உலக நாடுகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு எதிராக அதிமுக: மாசெக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

செந்தில்பாலாஜி கைது: முதல்வர் ஆலோசனை!

மீன்பிடி தடை இன்றுடன் நிறைவு: மீன்கள் விலை குறையுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *