ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை இழக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் உள்ளது.
நாடு முழுவதும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
ஆந்திராவின் 175 சட்டப்பேரவை தொகுதிக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
அங்கு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக- சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி- பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்டது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆந்திரா சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜக-தெலுங்குதேசம்-ஜனசேனா கட்சி கூட்டணி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போது ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 25 இடங்களையும், பிற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை ஆந்திராவில் பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலயில் உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் சென்னை : தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை!
விருதுநகர் : திமுக கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விஜயகாந்த் மகன்!