மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) 2025 – 2026-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். Anand Srinivasan criticized central
இந்தநிலையில், இந்தியாவில் உள்ள 138 கோடி மக்களுக்கு என்ன வரிச்சலுகை கொடுக்கப்போகிறீர்கள் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
“பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், “ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. 4 முதல் 12 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு ரிபேட் கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் பழைய வருமான வரி திட்டத்தையே ஒழித்துவிட்டார்கள். இனிமேல் புதிய வருமான வரி விதிப்பு முறை தான் நடைமுறையில் இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. இதன்மூலம் 1 லட்சம் கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். Anand Srinivasan criticized central
இந்தியாவில் 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் 2 கோடி பேர் மட்டும் தான் வருமான வரி கட்டுகிறார்கள். அதிலும் 1.5 கோடி பேர் தான் 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
இந்த பட்ஜெட்டில் 2 கோடி சம்பாதிக்கிறவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கும். அதைவிட அதிகமாக சம்பாதிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு 1 முதல் 2 லட்சம் வரை சலுகை கொடுத்திருக்கிறார்கள். இதற்காக நிர்மலா சீதாரமனுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால், என்னைப்போன்றவர்களுக்கு வருமான வரிச்சலுகை கொடுப்பதற்கு பதிலாக, நடுத்தர மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். 138 கோடி பேருக்கு என்ன வரிச்சலுகை கொடுக்கப் போகிறீர்கள்?
ரிலையன்ஸ், நைடா கம்பெனிகள் பல மாநிலங்களில் ஹேப்பி ஹவர்ஸ் என்ற திட்டத்தில் பெட்ரோல், டீசலை ரூ.3 முதல் ரூ.5 வரை குறைவாக விற்பனை செய்கிறார்கள். பெட்ரோல், டீசலை குறைவான விலையில் விற்க முடியும் என்பது இதன் மூலம் தெரிகிறது. Anand Srinivasan criticized central
ஆனால், இந்தியன் ஆயில், பிபிசிஎல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. புதிய வருமான வரி விதிப்பின் மூலம் அரசுக்கு கூடுதல் செலவாகும் 1 லட்சம் கோடியை டீசல் வரி, கேஸ் வரி, பெட்ரோல் வரியில் குறைத்திருந்தால் மக்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்திருக்கும்.
ஓலா, ஊபர், ரேபிடா ஓட்டுநர்கள் கையில் பணம் இருந்திருக்கும். அந்த பணத்தை அவர்கள் செலவு செய்திருப்பார்கள். என்னைப் போன்ற ஆட்கள் வங்கியில் தான் பணத்தை சேமிப்பார்கள். அந்த பணத்தை உடனடியாக செலவு செய்யப்போவதில்லை. அதனால் நுகர்வு திறன் அதிகரிக்காது” என்றார். Anand Srinivasan criticized central