நிறுத்தப்பட்ட மும்பை டாக்ஸிகளும்… ஆனந்த் மகிந்திராவின் நினைவும்!

Published On:

| By Monisha

Anand Mahindra's Tribute To Stopped Mumbai Taxis

மும்பை என்றாலே பலருக்கும் நினைவு வரும் பழைமையான விஷயங்களில் ஒன்று டாக்ஸி. ‘காலி பீலி’ என அழைக்கப்படும் மஞ்சள், கருப்பு நிற டாக்ஸிகள் இல்லாத மும்பையை நினைப்பதே கடினம். அப்படியான டாக்ஸிகள் நேற்றுடன் (அக்டோபர் 30) நிறுத்தப்பட்டன.

இந்த ‘மஞ்சள் டாக்ஸி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டன’ என்று ஆனந்த் மகிந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1970-களில் பிரீமியர் ஆட்டோமொபைல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியர் பத்மினி என எல்லோராலும் அழைக்கப்பட்ட கார் மாடல்தான் காலி பீலி டாக்ஸிகள்.

இந்த காருக்கு கருப்பு, மஞ்சள் வண்ணம் அடித்து டாக்ஸியாக பல காலமாக மும்பை டாக்ஸிவாலாக்கள் பயன்படுத்தி வந்தனர்.

2001-ல் இந்த கார்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் மும்பை நகரத்தில் ஒரு தயாரிப்பு காரை இயக்குவதற்கான காலம் 20 ஆண்டுகள்தான் என்பதால் இந்த கார்களை இயக்குவது நேற்றுடன் (அக்டோபர் 30) நிறுத்தப்பட்டன.

உபேர் மற்றும் ஓலா வகை கார்களின் வருகைக்கு முன்பு, மும்பையில் ‘காலி பீலி’ எனப்படும் கருப்பு, மஞ்சள் வகை டாக்ஸி சேவைகள் மும்பைவாசிகளின் போக்குவரத்து முறையாக இருந்தது.

இந்த கருப்பு – மஞ்சள் டாக்ஸிகள் மும்பை வாசிகளின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தன. எண்ணற்ற இனிமையான நினைவுகளுடன் தொடர்புடையவை.

இந்த நிலையில் காலி பீலி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டன என்று ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று முதல், பிரீமியர் பத்மினி டாக்ஸிகள் மும்பையின் சாலைகளில் இருந்து மறைகின்றன. அவை நம்பமுடியாதது, சத்தமில்லாதது. பொருட்களை எடுத்துச் செல்லும் திறனும் அதிகம் இல்லை. ஆனால் அவை பழங்கால மக்களுக்கு, டன் கணக்கில் நினைவுகளை சுமந்தன.

மேலும் அவை எங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துத் செல்லும் வேலையைச் செய்தன. நல்ல தருணங்களுக்கு நன்றி” என்று அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வருவது கூட இந்த பிரீமியம் பத்மினி கார்தான் என்பது நினைவுகூரத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

தொடங்கியது ஆப்பிள் Scary Fast நிகழ்ச்சி!

சென்சாரில் 60 கட் வாங்கிய ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share