தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு இன்று (அக்டோபர் 15) முதல் ரூ.2 உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும், நிறை கொழுப்பு பால் மற்றும் எருமை பால் விலையை அமுல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ் சோதி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதம் அமுல் நிறுவனம் அமுல் கோல்டு, ஷக்தி, டாசா பால் விலையை ரூ.2 உயர்த்தியது.
அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியுடன், மதர் டைரி, ஆனந்தா உள்ளிட்ட பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தின.
பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரியால் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல மாநில கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் பொருட்டு அமுல் நிறுவனம் ஐந்து கூட்டுறவு சங்கங்களுடன் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 70-வது கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது,
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பால் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பால் பொருட்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதியை உற்பத்தி நிறுவனங்கள் உறுதி செய்யும். இதனால் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செல்லும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
தூங்காமல் புலம்பிய கொலையாளி : 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு!
1000 கி.மீ கடந்த ராகுல்: சுவாரஸ்ய நிகழ்வுகள்!