டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (நவம்பர் 9) உளவுத் துறை (ஐபி) அதிகாரிகளின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள உளவுத் துறை (ஐபி) அதிகாரிகளின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று (நவம்பர் 9) காலை 11 மணிக்கு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. டெல்லியில் ரகசிய இடத்தில் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குநர் தபன் டேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கியமாக இக்கூட்டத்தில், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மத்திய, மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால், அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து இக்கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்புச் சூழல், பயங்கரவாதம், அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதியளித்தல், போதைப் பொருள் பயங்கரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், பயங்கரவாத தொடர்பு, இணையவெளியின் சட்டவிரோத பயன்பாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் நடமாட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜெ.பிரகாஷ்
மோடியின் செயலால் கள்ளப்பணம் அதிகரிப்பு: கே.எஸ்.அழகிரி
வேந்தர் பதவியை பறிக்க முடிவு: கேரள ஆளுநருக்கு எதிராக சட்டம்!