அமித் ஷாவின் மப்ளர் விலை ரூ 80,000/ராகுல் டி-சர்ட் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி!

Published On:

| By Jegadeesh

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பாத யாத்திரையை காங்கிரஸ் ஸ்டார் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறார்.

அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை ரூ.41,257 என பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மப்ளர் ரூ. 80,000 என்றும், பாஜக தலைவர்கள் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள சன்கிளாஸ் அணிந்துள்ளனர் என்றும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’க்கு மக்களிடம் இருந்து “நல்ல வரவேற்பு” கிடைத்து வருவதால் எதிர்கட்சிகள் கவலை அடைந்து வருவதாக கூறினார்.

மேலும் , பாரத் ஜோடோ யாத்ராவில் பாஜக வினருக்கு என்ன பிரச்சனை? 2.5 லட்ச ரூபாய் சன்கிளாஸ் மற்றும் 80,000 ரூபாய் மப்ளர் அணிந்து கொண்டு ராகுல் காந்தியின் டி-சர்ட் பற்றி பேசுகிறார்கள். பாஜக வினர் தற்போது டி-சர்ட்களில் அரசியல் செய்கிறார்கள்” என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற தலைவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு ராகுல் காந்தியை தாக்கி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’ராகுல் ஷூ பிராண்ட் பத்தியும் விசாரிச்சு சொல்லுங்களேன்!’ பாஜகவுக்கு நெட்டிசன்கள் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share