மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இன்று (ஏப்ரல் 28) பீகார் மாநிலம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
அதன்பிறகு பெகுசராய் ஹெலிபேடு தளத்துக்குச் சென்ற அமித்ஷா அங்குத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்டார்.
அப்போது ஹெலிகாப்டர் தரையிலிருந்து சிறிது தூரம் மேலே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக லேசாகத் தடுமாறியது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் என்பதால் பரபரப்பும் ஏற்பட்டது.
इस हेलीकाप्टर में गृहमंत्री अमित शाह सवार थे .
बेगूसराय में तेज़ हवा की चपेट में आ कर हेलीकाप्टर हो गया डिसबैलेंस.#amitsha#helicopter pic.twitter.com/lIa8b8m5xE
— Gaurav Yadav (@ygauravyadav) April 29, 2024
ஆனால் சில நொடிகள் தடுமாறிய ஹெலிகாப்டர் மீண்டும் பைலெட்டின் கட்டுப்பாட்டுக்குள் வந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் நல்வாய்ப்பாக ஹெலிகாப்டரில் பயணித்த அமித்ஷா உட்பட யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
பலத்த காற்று காரணமாக ஹெலிகாப்டர் சமநிலையை இழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அமித் ஷா சென்ற ஹெலிகாப்டரில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நீலகிரி போல வேறெங்கும் நடக்கக் கூடாது”: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!
அஜித்தின் விடாமுயற்சி தாமதம்: என்னதான் காரணம்?
அந்த பைலட்டுகள பாத்து சூதானமா ஓட்ட சொல்லுங்கய்யா