உக்ரைன் நடத்தும் எதிர்த்தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!

Published On:

| By christopher

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த்தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து வாக்னர் படைகள் வெளியேற்றப்பட்டப் பின்பு ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் எதிா்த்தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுகுறித்து, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசியுள்ள அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி மாா்க் மில்லி, “ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிகவும் மந்தமாக இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கும் ஒன்றும் எதுவும் இல்லை. இது போரின் இயல்பே ஆகும்.

எதிா்த்தாக்குதல் மந்தமாக இருந்தாலும், அந்த நடவடிக்கையில் உக்ரைன் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. சவால்கள் நிறைந்த, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள நிலப் பகுதியை உக்ரைன் ராணுவம் மிகவும் கவனமாகக் கடந்து முன்னேறி வருகிறது.

நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் அந்த நாட்டுப் படை நகா்ந்து வருகிறது. இப்போது நடைபெறுவது நிஜமான போா். இதில் உயிரிழப்புகளும் மிக அதிகமாக இருக்கும்” என்று எச்சரித்துள்ள அவர், “அது குறித்து நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்றும் கூறியுள்ளார்.

நாகராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பாரதீய ஜனதா கட்சி: அலங்கோல ஆட்சி, அர்த்தமற்ற அரசியல், ஆளுநர் ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel