அம்பாதி ராயுடுவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Manjula

ambati rayudu quits from ysrcp

சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு திடீரென வெளியிட்டுள்ள அறிவிப்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு கடந்த சில வருடங்களாக, சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வந்தார். கடந்த வருடம் சென்னை அணி ஐபிஎல் தொடரை வென்ற கையோடு, தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்.

ராயுடுவின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்? என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, கடந்த டிசம்பர் 28-ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 6) யாரும் எதிர்பாராவிதமாக, அரசியலில் இருந்து தான் விலகுவதாக ராயுடு தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க விரும்புகிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். இதுகுறித்த என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை  உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”அரசியலில் சேர்ந்து பத்து நாட்கள் முடிவதற்குள் இப்படி ஒரு முடிவா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் விநியோகம் எப்போது?

ED அதிகாரிகள் மீது தாக்குதல்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel