Amazon to Lay Off again in Alexa Unit

மீண்டும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ள அமேசான்!

இந்தியா

அமேசான் நிறுவனம் அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம்  செய்வதாக அறிவித்துள்ளது.

கொரோனா காலத்துக்குப் பின்னர் பிரபல நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

50 கோடிக்கும் அதிகமான அலெக்ஸா கருவிகளை அமேசான் விநியோகம் செய்துள்ள நிலையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் வேலை இழக்கின்றனர்.

அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம், அமேசான் தனது இசை மற்றும் கேமிங் பிரிவுகளிலும், சில மனிதவளப் பணிகளிலும் வேலைக் குறைப்புகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

ஆளுநர் சிறுபிள்ளையா? நயினார் ஆவேசம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *