கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அமேசானில் வேலை!

இந்தியா

அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆரோரா (Aurora) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

வணிக உலகின் பெருநிறுவனமாகத் திகழும் அமேசான் நிறுவனம் மும்பையில் உள்ள சோல் ஏஆர்சி (Sol ARC) என்னும் லாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களில் கற்றல்திறன் குறைபாடு உள்ள இளம் வயதினருக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.

இதில் திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி பணியாளர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துவது மற்றும் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆதரவாக இருப்பதை ஊக்குவிக்கும் என்றும்   ‘கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களை உள்ளடக்கிய, அனைவருக்கும் சமமான பணியிடங்களை உருவாக்குவதன் மற்றுமொரு முயற்சிதான் இந்த ஆரோரா திட்டம்’ என்றும் அமேசான் இந்தியாவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ சீரகக் கஞ்சி

பேசுவது பிரபாகரன் மகள் துவாரகாவா?

விஷால் 34 டைட்டில் அப்டேட் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *