எரியும் விளக்குகளில் எண்ணெயை எடுக்கும் குழந்தைகள்: அகிலேஷ் யாதவ்

அரசியல் இந்தியா

நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை உள்ளது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்துக்களின் புனித தெய்வமான ராமருக்கான கோயில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 21ஆம் தேதி பக்தர்களுக்கு திறக்கப்பட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் தீபாவளியை குறிக்கும் வகையிலும், ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டியும், சரயு நதிக்கரையில் 25,000 தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. கின்னஸ் உலக சாதனை பதிவு நிறுவனம், டிரோன் மூலம் இதனை பதிவு செய்து எண்ணிக்கையை உறுதி செய்து, இதை ஒரு உலக சாதனை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சமாஜ்வாதி ஜனதா கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து சில குழந்தைகள் எண்ணெயை எடுத்து பாத்திரங்களில் ஊற்றி கொள்கின்றனர்.

corruption: Demonetisation 'biggest corruption' in world: Akhilesh Yadav - The Economic Times

இதுகுறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் கருத்தை பதிவிட்ட அகிலேஷ் யாதவ், “பக்தி ஒருபுறம், வறுமை ஒருபுறம். எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை அவர்களை தள்ளி விட்டது. ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளி பெற செய்யும் ஒரு பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா பயணம்!

ஹெல்த் அண்ட் பியூட்டி: வாக்ஸிங் செய்து கொள்ள ஈஸி வழி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *