பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது என்று மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக இன்று (ஜூலை 2) பொறுப்பேற்று கொண்டார். அவருடன் 8 என்சிபி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அஜித்பவாரின் இந்த திடீர் முடிவு மகாராஷ்டிரா அரசியலில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்புக்கு பின்னர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். அமைச்சரவை பொறுப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பிரதமர் மோடி தலைமையிலானா பாஜக அரசில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. உலக நாடுகள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக மோடி உள்ளார். இதனால் அவரை பலரும் ஆதரித்து பாராட்டி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வோம். மகாராஷ்டிரா மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து நாங்கள் உழைப்போம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சில சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களது நிலைப்பாட்டை வரவேற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடையவில்லை அன்றாட மக்களின் பயன்பாட்டில் உள்ள பொருட்களின் விலை தான் வளர்ச்சி அடைந்துள்ளது….. பொய் சொல்வதற்கெல்லாம் ஒரு அளவில்லையா…