மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் நிர்வாக ரீதியிலான விஷயங்கள் தொடர்பாக பி.கே.மிஸ்ரா நடவடிக்கைகளை மேற்கொள்வார். அதேவேளையில், தேசிய பாதுகாப்பு, ராணுவ விவகாரம், உளவுத்துறை தொடர்பான விவகாரங்களை அஜித் தோவல் கவனிப்பார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றது முதல், அஜித் தோவல் மற்றும் மிஸ்ரா ஆகிய இருவரும் மோடிக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்தநிலையில், மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், மீண்டும் அவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவைத் தேர்தல் முடிந்து, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் மாப்பிள்ளை சபரீசன் ரோல்!
மொபைல் எண்களுக்கும் இனி கட்டணம்: டிராய் அதிரடி!