இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கட்டண உயர்வு விரைவில் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது.
இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். இந்தச் சூழலில் ஏர்டெல் அந்தக் கட்டணத்தில் விலையை உயர்த்தி உள்ளது.
இப்போது வரை ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக ரூ.99 உள்ளது. இதில் ரூ.99 டாக்டைம், நொடிக்கு ரூ.2.5 பைசா கட்டணம் மற்றும் 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இதில்தான் ஏர்டெல் இப்போது கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதனால் பயனர்கள் இனி ரூ.155-க்கு குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
இதை சோதனை முயற்சியாகவே ஏர்டெல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
இதன் முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை ஏர்டெல் கொண்டு வரும் எனத் தெரிகிறது. அப்படி செய்தால் ரூ.155-க்கு குறைவான ரீசார்ஜ் இருக்காது.
கடந்த 2018 முதல் ரூ.35, ரூ.49, ரூ.79 கடைசியாக ரூ.99 என குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-ராஜ்
அவ்வை நடராஜன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1